அதிமுகவுடன் நேரடியாக மோதும் டிடிவி... தேனி, திருச்சி சீட் யாருக்கு? எகிறும் எதிர்பார்ப்பு.!! - Seithipunal
Seithipunal


 தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நிறைவு பெற்று வேட்பாளர்களை அறிவித்துள்ள சூழலில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியல் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. 

பாஜக தலைமையான கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேனி மற்றும் திருச்சி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். 

தேனி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் களமிறங்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் தேனி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதேபோன்று கடந்த 24 ஆம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டவர் என்ற அடிப்படையில் மீண்டும் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேவேளையில் திருச்சியில் யாரை களம் இருக்கப் போகிறார்கள் டிடிவி தினகரன் என்று எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சூழலில் அதிமுக நேரடியாக களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது ‌ 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK candidate list releasing today


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->