ஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன் அமமுக கூட்டணி முடிவு – 2026 தேர்தலில் நான்கு முனைப் போட்டி! டிடிவி தினகரன் கொடுத்த டிவிஸ்ட்! - Seithipunal
Seithipunal


2026 சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எந்தக் கூட்டணியில் அமமுக இணையும் என்பது குறித்து அதிக கவனம் எழுந்துள்ளது. இதை தெளிவுபடுத்தும் வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு முன்பாக அமமுக எந்தக் கூட்டணியில் இடம் பெறும் என்பதை முடிவு செய்து அறிவிப்போம் என தெரிவித்தார். அதிமுக குறித்து பேசும்போது,
“எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து, அதிமுகவில் யார்மீதும் எங்களுக்கு வருத்தம் இல்லை. எங்களுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. அந்த துரோகத்திற்கே எதிராக தான் அமமுக உருவாக்கப்பட்டது,” என்று கடுமையாக விமர்சித்தார்.

கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த தினகரன்,“அமமுக இரண்டு முறை தனித்துப் போட்டியிட்டது. மக்கள் ஆதரவு குறைந்தது. எனவே இம்முறை கூட்டணியில் சேருவோம் என்ற முடிவில் இருக்கிறோம். சில கட்சிகள் எங்களுடன் பேசியும் வருகின்றன. துரோகத்தை வீழ்த்த எந்த கூட்டணி சரியாக இருக்கும் என்ற கோணத்தில் அமமுக முடிவு எடுக்கும்,” என்று கூறினார்.

மேலும், 2021 சட்டசபைத் தேர்தலை நினைவுகூர்ந்த அவர்,“அப்போது அதிமுகவுடன் பேசியது உண்மை தான். என்னுடன் இருந்த 40 பேருக்கு சீட் தரலாம், நான் போட்டியிட மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் எடப்பாடி அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் தான் அமமுக போட்டியிட்டது,” என்று வலியுறுத்தினார்.

கூட்டணி முடிவு பிப்ரவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், திமுக–காங்கிரஸ் மற்றும் அதிமுக–பாஜக கூட்டணிகள் இறுதி அறிவிப்பை வெளியிட்ட பிறகே தினகரன் தனது அடுத்த கட்ட முடிவை அறிவிப்பார் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

2026 சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக-என்டிஏ மற்றும் தவெக–அமமுக ஆகிய நான்கு முனைப்போட்டியే சூழலை சூடேற்றும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AMMK alliance ends before Jayalalithaa birthday four pronged contest in 2026 elections TTV Dhinakaran twist


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->