எடப்பாடிக்கு அமித் ஷா விடுத்த வார்னிங்..முடியவே முடியாது.. ஒரு நிமிஷம் இருங்க.. கிளம்பிய எடப்பாடி! கோவத்தில் அமித் ஷா?
Amit Shah warning to Edappadi its impossible wait a minute Edappadi has left Amit Shah in Goa
டெல்லியில் இரு நாட்களுக்கு முன் நடந்த சந்திப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் இருந்து சில முக்கிய உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் கூட ஆளும் திமுகவுக்கு மாற வாய்ப்பு உள்ளதாகவும், இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என அமித் ஷா எடப்பாடியிடம் தெரிவித்துள்ளார். “உங்க கட்சியை விட்டு சிலர் போகப்போறாங்க… கவனமா இருங்க” என்று நேரடியாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இதை கேட்ட எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த சில மாதங்களாகவே அதிமுக உட்கட்சிப் பூசல்கள், வலுவான தலைமை பற்றாக்குறை போன்ற சவால்களை சந்தித்து வருகிறது. மறுபுறம், தமிழகத்தில் தங்களை விரிவாக்க பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. ஆனால் அதிமுக-பாஜக கூட்டணி உறவில் சுமூகத்தன்மை குறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில், அதிருப்தியிலுள்ள சில அதிமுக தலைவர்களை திமுக செயல்படத் தொடர்பு கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கட்சி மாறினால் எதிர்வரும் தேர்தல்களில் அதிமுக பெரும் பின்னடைவை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமித் ஷா எச்சரித்துள்ளார். அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்து, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தி, கட்சி ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அவரது வலியுறுத்தல்.
மேலும், அதிமுகவின் ஒரு முக்கிய தலைவரே விரைவில் திமுகவில் சேர உள்ளார் என்றும், இதற்கான இணைப்பு விழா விரைவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்றொரு தகவலும், சென்னையைச் சேர்ந்தவர் என்றொரு தகவலும் பரவி வருகிறது. அவருக்கு மீதான சில வழக்குகள் நிலுவையில் இருப்பது, பாஜகவுடன் அதிமுக வைத்த கூட்டணிக்கு அவர் காட்டும் எதிர்ப்பு, கட்சியில் பதவி கிடைக்காத விரக்தி போன்றவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
சுமார் 5,000 பேருடன் இணைந்து அவர் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த மாற்றம் நடந்தால், அதிமுகவின் அடித்தளம் பெரியளவில் குலையக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தேர்தலுக்கு முன்பு கட்சி மாறும் நிகழ்வுகள் வழக்கமானதாக இருந்தாலும், இம்முறை அது அதிமுகவுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்று மதிப்பிடப்படுகிறது.
English Summary
Amit Shah warning to Edappadi its impossible wait a minute Edappadi has left Amit Shah in Goa