2 நாள் பயணம்.. தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா! முழு விவரம் இதோ... - Seithipunal
Seithipunal


பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா தேர்தல் பரப்புரைக்காக இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவுள்ளார். 

ஏப்ரல் 12ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் மதுரை வரும் அமித் ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை செல்ல உள்ளார்.

சிவகங்கைச் பா.ஜ.க கூட்டணி வேட்பாளரை ஆதரித்து வாகன பேரணி சென்று பிறகு மதுரை பா.ஜ.க வேட்பாளர் சீனிவாசனுக்கு ஆதரவாக வாகன பேரணியில் சென்று வாக்கு சேகரிக்க உள்ளார். 

இதனை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தும் அமித்ஷா மதுரையிலேயே இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். 

ஏப்ரல் 13-ஆம் தேதி காலை திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தக்கலை செய்கிறார்.அங்கு பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். 

அதனைத் தொடர்ந்து திருச்சி பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்தும், தூத்துக்குடி தென்காசி பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்தும் ஏப்ரல் 13ஆம் தேதி மாலை பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah coming TN


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->