அற்புதம்! 6 புதிய அறிவிப்புகளை திருவாரூருக்கு வழங்கிய முதலமைச்சர்...!
Amazing The Chief Minister gave 6 new announcements to Thiruvarur
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவாரூர் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன் விபரங்கள்,"
- திருவாரூர் மாவட்டத்தில் பழமைவாய்ந்த ஜூபிலி மார்க்கெட் பகுதியில் ரூ.11 கோடி செலவில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்.
- மாணவர்கள் பயன்பெறும் வகையில் நன்னிடம் வட்டம், வண்டாம்பாலை ஊராட்சியில் ரூ.56 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் திருவாரூர் மாவட்ட மாதிரி பள்ளி புதிதாக அமைக்கப்படும்.
- மாணவிகள் பயன்பெறும் வகையில் மன்னார்குடி நகராட்சியில் ரூ.18 கோடி செலவில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்படும்.
- ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால் மதகுகள் மற்றும் நீர் ரெகுலேட்டர்கள் ஆகியவை ரூ.43 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
- பூந்தோட்டம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
- பாரம்பரிய நெல் ரகங்களை தனது வாழ்நாள் முழுவதும் பேணி பாதுகாத்த நெல் ஜெயராமனின் அரும்பணியை போற்றும் வகையில் திருத்துறைப்பூண்டியில் அவருக்கு நினைவுச்சிலை அமைக்கப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
Amazing The Chief Minister gave 6 new announcements to Thiruvarur