அமராவதி அதிகாரப்பூர்வ தலைநகரம்....! நீண்டநாள் கனவு நனவானது...! - சந்திரபாபு நாயுடு நன்றி - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசியத் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் அதிகாரப்பூர்வத் தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டதை ஒட்டி, தனது நெகிழ்ச்சியான நன்றிகளை எக்ஸ்  தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது,"ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்தச் சட்டம் 2026-க்கு ஒப்புதல் வழங்கி, எங்களது நனவாகாக் கனவாக இருந்த தலைநகர் அமராவதியைச் சாத்தியமாக்கிய மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு, ஒட்டுமொத்த ஆந்திர மக்களின் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்.

நமது மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறையுடனும், வழிகாட்டியாகவும் திகழும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவிற்கு ஆதரவளித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களுக்கும், எங்களோடு தோளோடு தோள் நின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் என் பணிவான நன்றிகளை தெரிவிக்கிறேன்.

இது ஆந்திரப் பெருமக்களுக்கும், குறிப்பாக நிலம் கொடுத்துத் தியாகம் செய்த எனது விவசாயிகளுக்கும் கிடைத்த மகுடமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amaravati official capital long standing dream come true Chandrababu Naidu thanks


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->