நிலம் ஒப்பந்தத்தில் முறைகேடு குற்றச்சாட்டு! ராபர்ட் வதேரா உள்ளிட்ட 9 பேருக்கு டெல்லி நீதிமன்றம் ஆஜர் உத்தரவு...!
Allegations irregularities land deal Delhi court orders 9 people including Robert Vadra appear
அரியானா மாநிலம் ஷிகோப்பூர் பகுதியில் அமைந்துள்ள நிலம் தொடர்பான பரபரப்பான வழக்கில் புதிய திருப்பம் உருவாகியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம், ஓம்காரேஷ்வர் பிராப்பர்டீஸ் நிறுவனத்திடமிருந்து சுமார் 3.53 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலம் வாங்கும் பரிவர்த்தனையில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ராபர்ட் வதேரா உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாக கருதி இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி சுஷாந்த் சங்கோத்ரா முன்னிலையில் நடைபெற்றது.
விசாரணையின் போது, ராபர்ட் வதேரா உள்ளிட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 9 பேரும் அடுத்த மாதம் 16-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கின் தொடர்பில் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கனவே முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
English Summary
Allegations irregularities land deal Delhi court orders 9 people including Robert Vadra appear