எங்களுக்கு இந்த தொகுதி வேண்டும்.! ஓபிஎஸ்., இபிஎஸ்.,க்கு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பிய கூட்டணி கட்சி.! 
                                    
                                    
                                   AIADMK TMC 2021 KAMBAM 
 
                                 
                               
                                
                                      
                                            அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி ஒதுக்க வேண்டும் என்று, அக்கட்சியின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். கூட்டணி உடன்படிக்கை, தொகுதி உடன்பாடு, பொதுக்குழு, செயற்குழு, தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளை அதிமுக -திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் சமீபகாலமாக முன்னெடுத்துள்ளன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக தலைமையில் ஏற்பட்ட அதே கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா என்பது பெரும் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியிலும், திமுக கூட்டணியிலும் சரி பல்வேறு கூட்டணி கட்சிகள் இடம் மாறவும், மூன்றாவது அணியை அமைக்கவும் திட்டமிட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

நேற்று தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதி தொகுதிக்கான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கூடல் செல்வேந்திரன் தலைமை வகித்தார். மேலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்தும், மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கம்பம் சட்டமன்ற பேரவை தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மான நகலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.