எடப்பாடி பிறந்தநாளில் இடியை இறங்கிய அதிமுக MLAகள்!சத்தமின்றி லீமா ரோஸ் செய்த சம்பவம்? அதிமுகவில் புதிய பிளவு?
AIADMK MLAs stormed the Edappadi birthday The incident of Leema Rose silently A new split in AIADMK
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளான இன்று, தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அவர் கட்டுக்குள் வைத்திருந்த அதிமுக தற்போது அதிகாரப்பூர்வமாக இரண்டாக உடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்கள் குழு, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அரசியல் பரபரப்பின் பின்னணியில் அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸின் பெயரும் முக்கியமாக அடிபடுகிறது.
அதிமுகவில் இதற்கு முன்பும் பல உட்பிளவுகள் ஏற்பட்டுள்ளன. முதலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் பிரிவு, பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாற்றங்கள் என பல அரசியல் அதிர்வுகளை கட்சி சந்தித்துள்ளது. தற்போது மீண்டும் ஒரு முக்கிய உடைப்பு உருவாகும் சூழ்நிலை நிலவுகிறது.
நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அணியினர் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி அணியினர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அரசியல் நகர்வுகளில் லீமா ரோஸ் முக்கிய பங்காற்றியுள்ளதாக கூறப்படுகிறது. லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ், தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் இணைந்து லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிக சொத்து மதிப்பு கொண்டவராகவும் அவர் பேசப்பட்டார்.
அவரது மருமகனும், தவெக முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா மூலம், அதிமுக அதிருப்தி அணியும் தவெக தரப்பும் இடையே தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும், சில நாட்களுக்கு முன்பு லீமா ரோஸ் அளித்த பேட்டியிலும் “அதிமுக - தவெக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தது தற்போது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்போது பலர் அதை சாதாரண கருத்தாக எடுத்துக்கொண்டாலும், தற்போது அது அதிமுகவில் உருவாகியிருக்கும் பிளவுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், விஜய்யை சந்தித்தபோது லீமா ரோஸ் அவரது கைகளைப் பிடித்து வாழ்த்து தெரிவித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பான மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவில் உருவாகியுள்ள இந்த புதிய அரசியல் சிக்கல் வரும் நாட்களில் எந்த திசையில் செல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
AIADMK MLAs stormed the Edappadi birthday The incident of Leema Rose silently A new split in AIADMK