அதிர்ச்சியில் அ.தி.மு.கவினர்....!!! தூத்துக்குடிக்கு திடீரென செங்கோட்டையன் வருகை தர காரணம் என்ன? 
                                    
                                    
                                   AIADMK members shock Sengottaiyan sudden visit Thoothukudi
 
                                 
                               
                                
                                      
                                            இன்று காலை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் ,மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன், சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு திடீரென வந்தார்.

இதில் அவருடன் வேறு யாரும் வரவில்லை.அதற்குப் பின்னர் அவர் தனியாக காரில் ஏறி சென்று விட்டார்.
இதற்கு முன்னதாக சென்னையில் தனது பயணம் குறித்து தெரிவித்தபோது, அவர் திருச்செந்தூர் செல்வதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் திருச்செந்தூர் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதுபோன்ற, அறிவிக்கப்படாத அவரது வருகை அ.தி.மு.க.கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத்  திடீர் வருகையின் காரணம் என்ன என்று இன்றளவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       AIADMK members shock Sengottaiyan sudden visit Thoothukudi