"நாற்காலியிலும் அறையிலும் இல்லை மாற்றம்!": முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு!
AIADMK Leader RB Udhayakumar Criticizes Governance Real Change Lies in People Lives Not Seats
ஆட்சி மாற்றம் என்பது வெறும் நாற்காலியையோ அல்லது இடத்தையோ மாற்றுவது மட்டும் அல்ல; அது மக்களின் வாழ்வியலில் ஏற்படும் அடிப்படை மாற்றத்தைக் குறிப்பதாகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்பு: அந்த அடிப்படைத் தன்மையைப் புரிந்து கொண்டு செயல்படுவார் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள்; ஆனால் அந்த நம்பிக்கையைத் நம்ம முதலமைச்சர் நிறைவேற்றுவாரா என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது என்று தெரிவித்தார்.
கீரை - குரோட்டன் செடி உவமை: ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் செயல்பாட்டை உவமைப்படுத்திப் பேசிய அவர், "நமது வீட்டுத் தோட்டத்தில் கீரைச் செடியையும் பயிரிடலாம், குரோட்டன் செடியையும் பயிரிடலாம். குரோட்டன் செடி பார்க்க அழகாகத்தான் இருக்கும்; ஆனால் அது கீரை அளவுக்கு நமக்கு அன்றாடப் பயன்பாட்டிற்கு உதவாது" என விமர்சித்துப் பேசினார்.
English Summary
AIADMK Leader RB Udhayakumar Criticizes Governance Real Change Lies in People Lives Not Seats