ஆர்வம் மிகுந்த செய்தி!!! எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் தொடங்கியது...!!!
AIADMK executive committee meeting has begun under leadership Edappadi Palaniswami
தமிழகத்தில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளது. இதில் பா.ஜ.க கூட்டணி அமைப்பதை டி.ஜெயக்குமார் உள்பட மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை.

மேலும், அவர்கள் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை வெளியிட்டார்கள். அதன் பின்னர் கட்சி கட்டுப்பாடு கருதி அமைதியாகி விட்டார்கள்.இந்நிலையில் அதிமுக தலைமை கழகத்தில், கட்சியின் 'செயற்குழுக் கூட்டம்' இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.
மேலும், கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் 'உசேன்' தலைமை வகிக்கிறார்.இந்த கூட்டணி அமைந்த பிறகு நடத்தப்படும் முதல் செயற்குழு என்பதால் இந்த செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் கூட்டத்தில் பா.ஜ.க கூட்டணி அமைக்கப்பட்டது ஏன்? தி.மு.க.வை வீழ்த்த தேவையான வியூகங்கள் பற்றி பொதுச்செயலாளர் 'எடப்பாடி பழனிசாமி' விளக்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் கூட்டணி தொடர்பான அதிருப்தியை கட்சியினரிடம் போக்குவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார்.
English Summary
AIADMK executive committee meeting has begun under leadership Edappadi Palaniswami