அதிமுகவில் இணைந்த ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர்!
AIADMK EPS ramanathapuram Raja Nakendran
ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ராஜா நாகேந்திரன் சேதுபதி, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முதலமைச்சருமான 'புரட்சித் தமிழர்' எடப்பாடி பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (28.7.2025 திங்கட் கிழமை), இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி அவர்கள் நேரில் சந்தித்து, தன்னைக் கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது, இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.A.முனியசாமி அவர்களும் உடன் இருந்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
AIADMK EPS ramanathapuram Raja Nakendran