ஈரோடு கிழக்கில் வாக்காளர் சரிபார்க்கும் பணியில் இறங்கிய அதிமுகவினர்...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்காத நிலையில் தொகுதி முழுவதும் 30க்கும் மேற்பட்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர்.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த 2 நாட்களாக ஈரோட்டில் கட்சி நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு, தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அடுத்த 3 நாட்களுக்குள் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் என தேர்தல் பொறுப்பாளர்களுக்கு பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். 

இதன் காரணமாக நேற்று காலை முதல் அதிமுகவினர் வீடு வீடாக சென்று வாக்காளர் பார்க்கும் பணியை தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் தலைமையிலான தேர்தல் பணி குழுவினர் மற்றும் உள்ளூர் பொறுப்பாளர்கள் வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள்..? இறந்தவர்களின் விவரம், வெளியூரில் யாராவது தங்கி இருக்கிறார்களா..? உள்ளிட்ட தகவலை அதிமுகவினர் சேகரித்து வருகின்றனர். மேலும் வெளியூரில் தங்கி வேலை செய்பவர்களின் தொலைபேசி எண்களையும் அதிமுகவினர் வாங்கிச் சென்றுள்ளனர். 

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் சரிபார்க்கும் பணியானது மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது. வீடு வீடாக செல்லும் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK embarked on voter verification in Erode East


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->