கழிவறைக்கும் உங்க தந்தை பெயரை சூட்டி கொள்ளுங்க CM ஸ்டாலின்! அதிமுக கடும் விமர்சனம்!
AIADMK Condemn to DMK MK Stalin Govt Kovai Kakkan name issue
கோவையில் கழிப்பிடத்திற்கு பேரறிஞர் அண்ணா, கக்கன் ஆகியோரின் பெயர்களை வைத்த திமுக அரசுக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "கோவையில் கழிப்பிடத்திற்கு பேரறிஞர் அண்ணா, கக்கன் ஆகியோரின் பெயர்களை வைத்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசு!
இது ஒரு மங்குனி அரசு என்பதற்கு இதை விட பெரிய சான்று வேண்டுமா என்ன?
நாங்கள் போற்றும் பேரறிஞர் அண்ணாவை, இவர்கள் வழிகாட்டி என்று சொல்லும் "அண்ணா"வை மதிக்கும் லட்சணம் இது தானா ? இது தான் மறைந்த தலைவர்களுக்கு இவர்கள் தரும் மரியாதையா?
மறைந்த பெருமதிப்பிற்குரிய தலைவர்களின் பெயர்கள் அந்த கழிப்பிடத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும்; வேண்டுமானால் முதல்வர் ஸ்டாலின் தன் தந்தையின் பெயரையே இதற்கும் சூட்டிக் கொள்ளட்டும்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
AIADMK Condemn to DMK MK Stalin Govt Kovai Kakkan name issue