தெறிக்க விடுவோம்!!!அ.தி.மு.க- பா.ஜ.க இணைந்து ஒரே பாதையில் ரூ.1000 கோடி ஊழலை எதிர்த்து...!!!
AIADMK BJP join forces to fight the Rs1000 crore corruption
அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. காட்சிகள் இனைந்து, தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஒரே பாதையில் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த போராட்டத்தில் முதற்கட்டமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் புகாரை முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.1,000 கோடி ஊழல் என்பதை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரூ.1,000 கொடுத்து விட்டு ரூ.1,000 கோடி ஊழல் எனக் குறிப்பிட்டு பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையை வரும் நாட்களில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. தனித்தனியாக போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பே டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக பா.ஜ.க. பல்வேறு போராட்டங்களை நடத்தி இருந்தது.
இந்நிலையில், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. தலைவர்களும் பேட்டிகளில் டாஸ்மாக் ஊழல் புகாரை முன்னிறுத்தி பேச திட்டமிட்டுள்ளனர்.இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்கு பின்னர் ஊழல் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பதிவிட்டிருந்தார்.
அமித்ஷா பதிவுக்கு வலுசேர்க்க ஊழல் என்ற கோணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இது தனித்தனியாக இரு கட்சியினரும் போராடினாலும் நோக்கம் ஒன்றாக இருக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
AIADMK BJP join forces to fight the Rs1000 crore corruption