அதிமுக–பாஜக கூட்டணி: கேட்டது 50தொகுதி! கிடைத்தது 30 தொகுதிகள்? நயினார் நாகேந்திரன் டெல்லி பயணத்தின் பின்னணி என்ன?! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக–பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வேகமெடுத்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு 30 தொகுதிகள் வரை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இணையாக, பாஜக தரப்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் ஆரம்ப பட்டியலை நயினார் நாகேந்திரன் விரைவில் டெல்லியில் தேசிய தலைவர் ஜேபி நட்டாவிடம் வழங்க உள்ளார்.

முன்னதாக சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு எடப்பாடி சம்மதம் தரவில்லை என்ற நிலைப்பாட்டையும் அறிந்துள்ளார். அதே சந்திப்பில் தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட ஆலோசனையும் நடந்ததாக கூறப்படுகிறது.

தற்போது டெல்லியில் இருக்கும் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதே பயணத்தில், பாஜக தரப்பில் இருந்து 55 தொகுதிகளின் விருப்பப் பட்டியல் ஜேபி நட்டாவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் இம்முறை பாஜக 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்தி வருகிறது.

சென்னை நகரத்தைப் பொறுத்தவரை வேளச்சேரி, துறைமுகம் போன்ற முக்கிய நகர்ப்புற தொகுதிகளை பாஜக கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தொகுதிகளில் ஏற்கனவே எஸ்ஜி சூர்யா, வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் மைதானப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் டிசம்பர் 15 அன்று தமிழகம் வர உள்ளதால், கூட்டணியின் தொகுதி பங்கீடு விவகாரம் அந்த நேரத்தில் முக்கிய முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

அதிமுக–பாஜக கூட்டணி மீண்டும் உறுதியாக இணைந்திருக்கும் நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையே அடுத்த கட்ட அரசியல் கூர்மையான நகர்வாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK BJP alliance Asked for 50 seats Got 30 seats What is the background of Nainar Nagendran Delhi trip


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->