டாக்டர் இராமதாஸ், உள்ளிட்ட தலைவர்களின் கோரிக்கை.! மாணவர்களின் போராட்டம் வெற்றி.!பணிந்தது பல்கலைக்கழகம்.!  - Seithipunal
Seithipunal


கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டுப்புழுவியல் பாடத்தில் நான்காண்டு   இளநிலை அறிவியல் (BSc - Sericulture) பட்டப்படிப்பு கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக இருந்த இந்தப் பட்டப்படிப்பு பின்னர் 2014-ஆம் ஆண்டில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டது. 

அங்கு பட்டுப்புழுவியல் படிப்புக்குத் தேவையான பட்டுப்புழு வளர்ப்புக் கூடங்கள், மல்பெரிச் செடி தோட்டம், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்புகளும்  ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால், பட்டுப்புழுவியல் படிப்புக்கு மாணவர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அப்படிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

மாணவர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ள ஒரு படிப்பை வேளாண் பல்கலைக்கழகம் எந்த அடிப்படையில் தன்னிச்சையாக நிறுத்தியது என்று தெரியவில்லை. இதற்காக பல்கலைக்கழகத் தரப்பில் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக இல்லை என்பது மட்டுமின்றி; அவை முன்னுக்குப்பின் முரணாகவும் உள்ளன. நிர்வாக வசதிக்காக அடுத்த இரு ஆண்டுகளுக்கு மட்டும் பட்டுப்புழுவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டிருப்பதாக ஒருபுறம் தகவல்களை பரப்பும் பல்கலைக்கழக நிர்வாகம், மறுபுறம், பட்டுப்புழுவியல் படிப்புகளை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை; பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏற்ற சூழல் மேட்டுப்பாளையத்தில் இல்லை என்றும் கூறுகிறது.

பட்டுப்புழுவியல் படிப்பு முடக்கப்படுவதைக் கண்டித்து வனவியல் கல்லூரியில் அப்படிப்பை படித்து வரும் மாணவர்கள் கடந்த 5 நாட்களாக அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் வேளாண் பல்கலைக்கழக நிர்வாகம் நடத்திய பேச்சுகள் தோல்வியடைந்து விட்டன. அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு எதிரான அடக்கு முறையை பல்கலைக்கழகம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இது பெரும் சிக்கலாக வெடிப்பதற்கு முன் தீர்வு காணப்பட வேண்டும் என்று பாமக உள்ளிட்ட தமிழக அரசியல் காட்சிகள் தமிழக முதியவருக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள செய்தியில், "வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வந்த, பிஎஸ்சி பட்டுப்புழுவியல் துறை சேர்க்கையை இரண்டு ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக நிறுத்தி, மல்பெரி செடி மற்றும் பட்டுப்புழு பயிரிடக்கூடிய சூழலுக்கு ஏற்ற வேறு இடத்துக்கு இப்பிரிவை மாற்றம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருந்தது. 

இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் இறுதியில், கடந்த ஆண்டுகளைப் போல், நடப்புக் கல்வி ஆண்டிலும் பட்டுப்புழுவியல் கல்வி தொடரப்படும். இப்படிப்பை இரண்டாண்டுகளுக்கு நிறுத்தி வைக்கும் பல்கலைக்கழகத்தின் முடிவு கைவிடப்படுகிறது'' என்று அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

agree university accept student demands


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->