தமிழகத்தில் நவோதயா பள்​ளி​கள்; 'மாநில அரசைக் கட்​டாயப்​படுத்​த மத்​திய அரசுக்கு அதி​காரம் இல்​லை'; உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்​தில் மாவட்​டம்​தோறும் 'ஜவஹர் நவோதயா வித்​யால​யா' பள்​ளியை நிறுவுவதற்கு அனு​ம​திப்​பது தொடர்​பான வழக்கு சமீபத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மாவட்​டம்​தோறும் நவோதயா பள்​ளி​களை நிறு​வுவது குறித்த தமிழக அரசின் நிலைப்​பாடு மற்​றும் பள்​ளிக்​கான நிலங்​களை அடை​யாளம் காண்​பது குறித்து 03 வாரத்​துக்​குள் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டிருந்தது.

இதைத் தொடர்ந்​து, இந்த வழக்​கு தொடர்பில் தமிழக அரசு பிர​மாணப் பத்​திரம் தாக்​கல் செய்​துள்​ளது. அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: 

''நவோதயா பள்​ளி​கள் விஷ​யத்​தில் தமிழக அரசு தனது நிலைப்​பாட்டை கடந்த ஜனவரி 05-ஆம் தேதி​யிட்ட கடிதம் மூலம் ஏற்​கெனவே மத்​திய அரசுக்​குத் தெரி​வித்​துள்​ளது.

தமிழகத்​தில் கல்விக் கட்​டமைப்பு மிகச் சிறப்​பாக உள்​ளது. தவிர, தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​களை நிறு​வுவதற்​கான முன்​மொழிவை வெறும் நிர்​வாக முன்​மொழி​வாக மட்​டுமே கருத முடி​யாது.

மத்​திய அரசின் நிர்​வாகக் கட்​டமைப்​புக்​குள் கல்விக் கொள்​கையை செயல்​படுத்​து​வது, மாநில அரசால் நிர்​வாக அதி​காரத்​தைப் பயன்​படுத்​து​வது தொடர்​பான சட்ட கேள்வி​களை​யும் இந்த வழக்கு எழுப்​பு​கிறது.

மத்​திய அரசின் நிர்​வாகக் கொள்கை மூல​மாகவோ, நீதி​மன்ற உத்​தரவு மூல​மாகவோ, மாநிலச் சட்​டத்​துக்கு முரணான வகை​யில் செயல்​படு​மாறு கட்​டாயப்​படுத்த முடி​யுமா என்ற கேள்​வியை​யும் இந்த வழக்கு எழுப்​பி​யுள்​ளது.

கல்வி என்​பது பொதுப் பட்​டியலில் வரு​வ​தால், இதில் சட்​டம் இயற்​ற​வும், கொள்கை வகுக்​க​வும் மாநில சட்​டப்​பேர​வைக்​கும் முழு அதி​காரம் உள்​ளது. அதன்​படி, தமிழகத்​தில் 2006-ஆம் ஆண்டு தமிழ் கற்​றல் சட்​டத்​தின்​ கீழ், தமிழகத்​தில் அனைத்​துப் பள்​ளி​களி​லும் தமிழ் மொழி கட்​டா​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, ஒரு மாநில அரசின் சொந்​தச் சட்​டங்​களுக்கு முரணான மத்​திய அரசின் நிர்​வாகக் கொள்​கைகளை செயல்​படுத்த முடி​யாது. எனவே, நவோதயா பள்​ளி​கள் நிறு​வுவதை கட்​டாய​மாக்​கவோ, தேசிய கல்விக் கொள்​கையை அமல்​படுத்த மாநில அரசைக் கட்​டாயப்​படுத்​தவோ மத்​திய அரசுக்கு அதி​காரம் இல்​லை.

மேலும், நிலம் தொடர்​பான விஷ​யங்​கள் மாநில விருப்​புரிமைக்கு உட்​பட்​டவை என்​ப​தால், ஒரு மாநிலத்​திடம் அதன் நிலத்தை ஒப்​படைக்​கவோ, ஒதுக்​கீடு செய்​யவோ நீதி​மன்​றம் கட்​டாயப்​படுத்தி உத்​தரவு பிறப்​பிக்க முடி​யாது.

எனவே, நவோதயா பள்​ளி​களுக்கு நிலத்தை அடை​யாளம் காணு​மாறு கடந்த 2025 டிசம்​பர் மாதம் பிறப்​பித்த உத்​தரவை உச்ச நீதி​மன்​றம் திரும்பப் பெற வேண்​டும்​.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Affidavit filed in Supreme Court opposing Navodaya Temples in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->