ஓ.பி.எஸை ஜெ.வின் ஆன்மா வஞ்சிக்கிறது.!! - பரபரப்பை கிளப்பிய முன்னாள் அமைச்சர்.!!
Admk udhayakumar said Jayalalithaa soul deceiving ops
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நிறைவு பெற்று வேட்பமான தாக்கல் நடைபெற்று முடிந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் அதிமுக உரிமை மீட்பு குழுவுக்கு ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்கியது பாஜக.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபன் செல்வம் அணியினருக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அத்தொகுதியில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ பன்னீர்செல்வம் அணியினருக்கு மூன்று தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதியை மட்டுமே பாஜக ஒதுக்கியது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் "மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் ஒரே ஒரு சீட்டு பெற போராடுகிறார் தற்போது ஓபிஎஸ்-க்கு ஏற்பட்ட நிலை முன்னாள் முதல்வர்கள் யாருக்கும் ஏற்படவில்லை. ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லாமல் மவுன சாமியாராக இருந்த பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் ஆன்மா வஞ்சிக்கிறது" என விமர்சனம் செய்துள்ளார்
English Summary
Admk udhayakumar said Jayalalithaa soul deceiving ops