#BREAKING || அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை தொடங்கியது! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற பொது தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்தான ஆலோசனைக் குழுவின் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள், வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன‌. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK seats share team meeting started


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->