வெட்டி, ஒட்டி பதிவிட்டு 200 ரூபாய் பரிசு பெற முயல்வதுதான் கொத்தடிமைத்தனம் திமுக ஐடி விங்க் - அதிமுக பதிலடி!
ADMk reply to DMK it wing
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து அதிமுக விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
அதில், "இரட்டை வாக்குகள்,போலி வாக்குகள், இறந்தவர்களை நீக்கியது போன்ற முறைகேடான வாக்குகளை வாக்காளர் பட்டியலில் இருந்து S.I.R. வாயிலாக நீக்கியது தான், உண்மையான வாக்குகளுடன் நடைபெற்ற பீகார் தேர்தலில் NDA கூட்டணியின் வெற்றிக்கு காரணம் என,
கழகப் பொருளாளர், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் அவர்கள் பேசியதை,
தங்களுக்கு ஏற்றாற் போல தேவையானதை மட்டும் எடுத்து அதனை வெட்டி, ஒட்டி பதிவிட்டு 200 ரூபாய் பரிசு பெற முயல்வதுதான் கொத்தடிமைத்தனம் திமுக ஐடி விங்க்.
இவ்வளவு வேகமாக பதிவிட்டவர்கள், "உங்கள் தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு S.I.R - ஐ கண்டால் ஏன் நடுங்கிறது?" என்ற எங்கள் கழகப் பொருளாளரின் கேள்விக்கான பதிலையும் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
மீண்டும் கேட்கிறோம். SIRனா பயமா ஸ்டாலின் SIR என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMk reply to DMK it wing