கல்லூரி மாணவிகளை தாக்கி, சிறைபிடித்த கல்குவாரி நிர்வாகிகள்! தமிழக அரசுக்கு குவியும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே நெற்பயிர்களை டிஜிட்டல் முறை பதிவு செய்ய சென்ற வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் மீது, கல்குவாரி நிர்வாகிகள் தாக்குதல் நடத்தி அவர்களை சிறைபிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே, டிஜிட்டல் முறை பதிவு செய்யும் விவகாரத்தில் கல்லூரி மாணவர்களை பயன்படுத்தக்கூடாது என்று, பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் இப்படியான ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து அதிமுகவைச் சேர்ந்த ராஜ் சத்யன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மாணவர்களை நில அளவுகளை டிஜிட்டல் பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என மாண்புமிகு அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதற்கு தான் கூறினார்கள்.

தனக்கு நிதியை மிச்சமாக்க இந்த விடியா திமுக மாடல் அரசு, படிக்கும் பருவத்தில் உள்ள மாணவர்களை ஆபத்தில் தள்ளுவதா?" என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Raj Satyan Condemn to DMK Govt


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->