தமிழக இளைஞர்கள் சீரழிவதற்கு திமுக ஆட்சி தான் காரணம் - ஆவேசத்தின் உச்சியில் இபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் நடக்க குறுகிய நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நெல்லை டவுன் வாகையடி முனையில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த செவ்வாய்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது அதிமுக ஜனநாயக அமைப்பு உள்ள கட்சி அதனால் தான் நான் இங்கு பெரிய பதவி பெற்று இருக்கிறேன் இது வேற எந்த கட்சியிலும் கிடையாது. முதல்வர் ஸ்டாலினுக்கு உழைப்பு பற்றி தெரியாது, அவர் ஒரு பொம்மை முதலமைச்சர். அதிமுக நாட்டு மக்களுக்காக உழைக்கும் கட்சி, திமுக கட்சி அல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி, திமுகவின் குடும்பத்தினர் அனைவரும் அந்த கம்பெனியில் உறுப்பினராக உள்ளனர்.

திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது. திமுகவின் வேட்பாளர்கள் அனைவரும் வாரிசுகள் அல்லது கோடீஸ்வரர்களாக தான் உள்ளனர். அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் கூட வேட்பாளராக போட்டியிட முடியும் அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதிமுக பயந்து விடும் என தமிழக முதலமைச்சர் நினைக்கிறார் உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் நாங்கள் பயந்தது கிடையாது அதிமுகவில் அனைவரும் மண்வெட்டி பிடித்தவர்கள் யாருக்கும் பயப்படுவார்கள் அல்ல.

வழக்கு பதிவு செய்துவிட்டால் அதிமுகவை அழித்து விடலாம் என ஸ்டாலின் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் வீட்டுக்குள் இருந்து கொண்டு எதுவும் தெரியாத திறனற்ற முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார் ஒரு காலத்தில் மன்னர்கள் வீட்டில் இருந்து கொண்டு நாட்டில் நடப்பதை அமைச்சர்களிடம் விசாரிப்பார்கள், அதேபோல் வீட்டில் இருந்து கொண்டு அமைச்சர்களிடம் நாட்டில் நடப்பது குறித்து முதலமைச்சர் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

எங்கள் கூட்டணியை ஸ்டாலின் கள்ளக் கூட்டணி என சொல்லிக் கொண்டிருக்கிறார் அவர் வைத்துள்ளது தான் கள்ளக் கூட்டணி. பிரதமரோடு சிரித்து சிரித்து பேசிவிட்டு எங்களை கள்ளக் கூட்டணி எனச் சொல்லும் ஸ்டாலின் நடிப்பில் சிவாஜி கணேசனையே மிஞ்சி விட்டார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருந்து கொண்டு எதனைப் பற்றி பேச வேண்டும் என தெரியாமல் என்னவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் சிரித்து பேசினால் பல் தான் தெரியும் வேறு என்ன தெரியும் , திமுகவில் உள்ளவர்கள் வீரணாக பார்க்கும் போது அவர்கள் பாஜகவினரிடம் சரணாகதி அடைந்து கொண்டிருக்கின்றனர்

அதிமுக யாருக்கும் அஞ்சும் கட்சி அல்ல; யாருக்கும் அடிமையும் அல்ல. பாஜகவை விட்டு நாங்கள் விலகி வந்து விட்டோம் எங்களை கொச்சைப்படுத்தி மக்கள் இடம் பேசி விட்டால் வெற்றி பெற்று விடலாம் என பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் ஸ்டாலின். எதை பேசினாலும் சிரித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என நினைக்க கூடாது நான் எப்படிப்பட்டவன் என தெரியாது . கடந்த கால வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும் நாட்டில் உதவாக்கரை முதலமைச்சர் என்றால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினாகத்தான் உள்ளார்.

மூன்றாண்டு காலமாக தமிழகத்தை குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து மாணவர்கள் இளைஞர்கள் போதை பொருள்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழக இளைஞர்கள் சீரழிவதற்கு திமுக ஆட்சி தான் காரணம் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுடன் கைகோர்த்து தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இருந்து கொண்டிருக்கின்றனர். இதைக் கேட்டால் வேறு வேறு காரணங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்டாலின் இதற்கெல்லாம் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை எதிர்த்து பேச முடியுமா என மேடைக்கு மேடை ஸ்டாலின் கேட்டு வருகிறார் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த ஒரே கட்சி அதிமுக மட்டும் தான் நாங்கள் ரியலாக எதையும் செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk public secratary edappadi palanisamy speech in nellai election campaighn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->