அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள்.. ஓபிஎஸ், இபிஎஸ்.,க்கு வந்த பகிரங்க எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பத்மகிரி பாபா ஆசிரமத்தின் தலைமை பொறுப்பாளர் சரவணகுமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்,

"கடந்த 10 தினங்களுக்கு முன்பு அதிமுகவின் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு சில விஷயங்களை என்னிடம் தெரிவித்துள்ளார். நான் இதை எப்படி செய்தியாளர்களிடம் தெரிவிக்கலாம் என்று நினைத்தேன். 

நான் முதலில் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு எனக்கு மன அழுத்தம் அதிகமாகியது. இதன் காரணமாக நான் இன்று இந்த தகவலை உங்களுக்கு தெரிவிக்கிறேன். 

எம்ஜிஆர் என்னிடம் சொன்னது என்னவென்றால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைத் தொண்டனுடைய ரத்த நாளத்தினால் கோர்க்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அமைப்பு. 

இந்த அமைப்புக்காக இத்தனை பேர் சண்டை செய்து கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் நீங்கள் சமரசமாக செல்ல வேண்டும். நான் கடுமையான கோபத்தில் இருப்பதாகவும் எம்ஜிஆர் என்னிடம் தெரிவித்தார். 

மேலும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களும் என்னிடம் பேசினார், அவர் என்ன சொல்கிறார் என்றால், நான் இறப்பதற்கு முன்பாக இந்த ஆட்சி பொறுப்பையும், கட்சி பொறுப்பையும் நான் ஓ பன்னீர்செல்வத்திடம் தான் ஒப்படைத்தேன். அவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்படைத்தேன். 

ஆனால், நான் அனைத்தையுமே ஓ பன்னீர்செல்வத்திடம் தான் ஒப்படைத்தேன். மறுபடியும் அவர் அதை என்னிடம் ஒப்படைக்கட்டும். பொதுச்செயலாளர் என்பது நான் தான். அதன் பிறகு நான் ஒரு முடிவுக்கு வருகிறேன். அதற்கு இடையில் நீங்கள் எதுவும் சண்டை செய்து கொள்ளக் கூடாது என்று அவர் சொல்ல சொன்னார். 

இந்த சண்டை இப்படியே நீடித்தால், ஓ பன்னீர்செல்வமாக இருந்தாலும், அது எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி, இரண்டு பேரில் யாரேனும் யாரேனும் ஒருவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பதனையும் ஜெயலலிதா என்னிடம் தெரிவித்துள்ளார். அவர் சொன்னதை அப்படியே நான் உங்களிடம் தெரிவித்து விட்டேன்.

என்னுடைய கனவில் தோன்றி எம்ஜிஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் இதை நேரடியாகவே என்னிடம் தெரிவித்தார்கள்" என்று சரவணா குமார் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK OPS VS EPS ISSUE MGR JJ


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->