கட்சி ஆரம்பித்தது தொடங்கி எல்லாமே அவங்கதானாமே! ஒவ்வொரு மீட்டிங்கையும் கேரவன் உள்ளே இருந்து பார்த்த 'அந்த' நடிகை? திருச்சி சூர்யா ஒபன் டாக் - Seithipunal
Seithipunal


நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததாக வெளியான தகவல்களுக்கு பின்னர், இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் விவாதமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அரசியல் விமர்சகர் திருச்சி சூர்யா, விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்யின் முதல் மாநாடு நடந்தபோது அங்கு கிட்டதட்ட 10 கேரவன்கள் வந்திருந்ததாகவும், அதில் அவர் திருமணத்தை மீறி உறவில் இருந்த நடிகை இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.பெண்கள் பாதுகாப்பு, பெண்ணுரிமை, குடும்ப மதிப்புகள் குறித்து விஜய் முன்பு கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டிய அவர், தற்போதைய சூழலை அதனுடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

விஜயின் அரசியல் பொதுக்கூட்டம், குடும்ப வாழ்க்கை, மற்றும் சமீபத்திய விவாகரத்து விவகாரம் ஆகியவை தொடர்பாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், “பொது வாழ்வில் பேசப்படும் கருத்துகளுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே முரண்பாடு இருக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் விஜய் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, விஜயின் குடும்ப விவகாரம் அரசியல் விவாதமாக மாறியிருப்பது கவனிக்கப்படுகிறது.

இதுவரை, விவாகரத்து மனு மற்றும் அதில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விஜய் தரப்பிலோ சங்கீதா தரப்பிலோ விரிவான அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. எனவே, நீதிமன்ற விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் ஊகங்களாகவே பார்க்கப்படுகின்றன.

தனிப்பட்ட குடும்ப விவகாரம் அரசியல் விமர்சனமாக மாறியுள்ள இந்த சூழல், தேர்தல் கால அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

She started the party and did everything That Antha actress who watched every meeting from inside the caravan Trichy Surya Open Talk


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->