சசிகலாவை தொடர்ந்து பாஜக பிடியில் அதிமுக எம்பி.? பேரதிர்ச்சியில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக எம்பிக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்து உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. 

கடந்த 7ஆம் தேதி அதிமுக எம்பி விஜயகுமார் திடீரென நாடு தழுவிய மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டும் என கூறியது மட்டுமில்லாமல், காஷ்மீர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை கன்னியாகுமரியில் தொடங்குவதால், அங்கு காமராசருக்கு ஆயிரம் அடி உயரத்தில் சிலை ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் முதலமைச்சர் எடப்பாடி தரப்பினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக எம்பி விஜயகுமார் தனது கன்னியாகுமரி மாவட்டம் மக்கள் கொடுத்த கோரிக்கை கடிதத்தை, பிரதமர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். 

பிரதமர் அலுவலகம் அதை அப்படியே ராஜ்யசபாவில் பேசுங்கள் என கூறி உள்ளது. இதனால் அதிமுக எம்பி விஜயகுமார் அதை அப்படியே ராஜ்யசபாவில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிகிறது. சில நாட்கள் முன்பு அதிமுகவில் இருந்து ராஜ்யசபா எம்பியான சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mp follow for bjp


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal