எல்லாம் போச்சு! வருத்தத்தில் அதிமுக எம்எல்ஏ.,! ஆலோசனையில் அதிருப்தி! - Seithipunal
Seithipunal


கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக கள பணியாற்ற தொடங்கி விட்டன. அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சு தான், தற்போது அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி தற்போதைய முதல்வர் தலைமையிலேயே வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக ஒரு டிவிட் போட, அது அதிமுக மூத்த தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் பெரும்பாலான மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலேயே வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திருவண்ணாமலை ஆவூரில் அதிமுக இளைஞரணி மற்றும் ஜெயலலிதா பேரவை அமைப்புகளுக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ., மோகன்,  "தமிழகத்தில் ஜெயலலிதா காலத்தில் அதிகமாக அதிமுகவில் இருந்த இளைஞர்களை விட, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் அதிகமாக உள்ளனர். எனவே, தமிழக இளைஞர்களிடையே அதிமுகவை கொண்டு செல்ல நாம் முயற்சி செய்ய வேண்டும்" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MLA open talk about party members count


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->