கூட்டணியும் கிடையாது.. ஒரு புண்ணாக்கும் கிடையாது! பாஜக என்றதும் எகிறிய அதிமுக எம்எல்ஏ! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி அருண்குமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அதிமுக பாஜக கூட்டணி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் "எங்களுக்கு ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான், அவருடைய கருத்தே எங்களது கருத்து. அவர் பழனிசாமி கிணற்றில் குதிக்க சொன்னாலும் குதிப்போம். பெரியார் வந்த பிறகு தமிழகத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

அண்ணாமலை கூட்டணியில் இருந்து கொண்டு இப்படி பேச கூடாது.. மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை. பேரறிஞர் அண்ணா குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமும் இல்லை, அது ஒரு தலைவருக்கான தகுதியும் கிடையாது" என அண்ணாமலையை கடுமையாக தாக்கி பேசினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவு பெற்ற பிறகு மேடையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக கீழே இறங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் செய்தியாளர்கள் எழுப்பி கேள்வி குறித்து கவுண்டம்பாளையம் எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் செய்தியாளரை அழைத்து "கூட்டணியும் கிடையாது... ஒரு புண்ணாக்கும் கிடையாது" என கூறிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினார்

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதிமுக என்ற ஒற்றை நபரால் தேசிய அளவில் அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை தொடர்ந்து திராவிட தலைவர்களை விமர்சனம் செய்து வருவதற்கு அதிமுக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கடும் கோபத்தில் உள்ளதை பாஜக எவ்வாறு சமாளிக்க போகிறது என்பதை பார்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK mla arunkumar criticized BJP


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->