அதிமுக ஒற்றைத் தலைமை யார்? திடீரென வந்த உத்தரவு.. குலுக்கலில் ஓபிஎஸ் பெயர்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை நடத்திய ஆக வேண்டும் என தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று பொதுக்குழு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. 

பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இன்று காலை 9.15 மணிக்கு திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக தெரிவித்துள்ளனர். மேலும், நுழைவு வாயிலில் 20 பரிசோதனை ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

பொது குழு நடைபெறும் வானகரம் முதல் பொதுக்குழு அரங்கு வரைக்கும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஒரு இடத்தில் கூட ஓ பன்னீர் செல்வத்தின் படம் இடம் பெறவில்லை.

 

இதனிடையே அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை யார் வரவேண்டும் என ஜெயலலிதா நினைவிடத்தில் கும்பகோணத்தை சார்ந்த அதிமுகவினர் சீட்டு குலுக்கி பார்த்தனர். அதில் ஓபிஎஸ் பெயர் வந்துள்ளதால் அவரிடம் சென்று வாழ்த்து பெற்றுள்ளனர். ஜெயலலிதா நினைவிடத்தில் குழுக்கப்பட்ட சீட்டில் ஓ பன்னீர்செல்வத்தின் பெயர் வந்துள்ளதால், ஜெயலலிதா ஆன்மா பன்னீர்செல்வத்தை பொதுச் செயலாளராக நியமிக்க ஆசைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk leader for ops name


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->