பல அடுக்கு பாதுகாப்பு இருந்தும் தனிப்பட்ட பாதுகாவலருடன் முதல்வர் விஜய் வலம் வருவது ஏன்?
admk inbadurai cm vijay
பல அடுக்கு பாதுகாப்பு இருந்தும் தனிப்பட்ட பாதுகாவலருடன் முதல்வர் விஜய் வலம் வருவது ஏன்? என்று அதிமுக எம்.பி. இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய், தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்?
மாநில காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்வருக்கே முழு நம்பிக்கை இல்லையா?
அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைச் சாராத ஒருவர், 'பாதுகாவலர்' என்ற பெயரில் அவரது நிழலாகத் தொடர்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு (Security Protocols) ஏற்புடையதா?
அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் (Access Control Zone) அவர் எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்?
பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு (Information Security) தொடர்பான இந்த முக்கியமான கேள்விகளுக்குத் தமிழக அரசு விளக்கம் அளிக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.