அதிமுகவின் முக்கிய பிரமுகர் சுய நினைவை இழந்தார்.! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.! - Seithipunal
Seithipunal



தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் அதிமுகவின் முக்கிய பிரமுகருமான வைத்தியலிங்கம். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்தது. 

வெளியான இறுதி ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின்படி தஞ்சை மாவட்டத்தில் மதுப்பூர் என்கிற ஒன்றியத்தில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றதுள்ளது. 

இந்த தேர்தல் முடிவுகள் வைத்தியலிங்கத்தை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதித்ததாக கூறப்படுகிறது. மூன்று தினங்களுக்கு முன்பு அவர் சுயநினைவு இல்லாமல் இழந்ததாக தெரிகிறது. 

இதையடுத்து வைத்தியலிங்கத்தை அவரது உறவினர்கள் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk importent person loss his memory


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->