#BREAKING || இன்னும் 4 மாதம்... நாள் குறித்த அதிமுக பொதுக்குழு.! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதில் அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதலில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

அதன்படி, 16 தீர்மானங்களுக்கு அதிமுக செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. 

அதிமுக பொதுக்குழுவில் ஆர் பி உதயகுமார் தீர்மானங்களை வசித்து வருகிறார். நான்கு மாதத்திற்குள் அதிமுக பொது செயலாளர் தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பொதுச் செயலாளராக போட்டியிடுபவர் தலைமை கழக நிர்வாகி பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும் என அதிமுக விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதிமுகவில் இரட்டை தலைமை பதவியை ரத்து செய்து தீர்மானம். இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க பொதுக்குழுவில் தீர்மானம்

மேலும், 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk general secretary election


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->