இன்று கூடும் அதிமுக செயற்குழு கூட்டம்.. முக்கிய பதவி.. அடிக்கப்போகும் ஜாக்பாட்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக செயற்குழு கூட்டம் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக இன்று கூடுகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 9ஆம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற அந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்நிலையில், மீண்டும் இன்று அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையின் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த கூட்டத்தில் .அதிமுகவில் காலியாக உள்ள அவைத் தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதிமுகவில். மீண்டும் ஒற்றை தலைமை என்ற கோரிக்கை வலுத்து வருகிறது இது குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk executive committee meeting


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->