ராஜேந்திர பாலாஜியை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆவின், மின்சாரம், இந்து சமய அறநிலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக, சுமார் 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பலரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

இதில், தன்னையும் ஏமாற்றியதாக அதிமுக முன்னாள் நிர்வாகி விஜய் நல்லதம்பி, விருதுநகர் மாவட்ட காவல் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் நிபந்தனை வைத்துள்ளது. மேலும், விருதுநகரை விட்டு ராஜேந்திர பாலாஜி வேறெங்கும் செல்லக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் திருத்தங்கலில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், மாபா பாண்டியராஜன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK ex-ministers meet Rajenthira balaji


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->