ஒருவன் காலில் விழுந்த பின் முகத்தை மூட கர்ச்சீப் ஏன் தேவை? எடப்பாடியை சாடிய ஸ்டாலின்!
ADMK EPS DMk MK Stalin
கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் கூறுகையில், திமுக எப்போதும் நெருக்கடிகளை அஞ்சாத கட்சியாகும் என்று வலியுறுத்தினார். அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் என்பதை எடப்பாடி பழனிசாமி தானே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி, தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுக்கத் தேவையான தைரியமும் திறனும் இல்லாமல் உள்ளார் என்றும் அவர் விமர்சித்தார். “எதிர்க்கட்சித் தலைவருக்குரிய மாண்பே இல்லாமல் என்னை ஒருமையில் குறை கூறுகிறார். திராவிடக் கொள்கை குறித்த புரிதலே இல்லாமல் அதிமுக தலைவராக இருக்கிறார். அண்ணாயிசம் பேசிய அதிமுகவினரை அடிமையிசம் பேசும் நிலைக்கு தள்ளியவர் எடப்பாடிதான்” என்றார்.
மேலும், “மக்கள் இன்றைக்கு கேட்கின்றனர்: ஒருவன் காலில் விழுந்த பின் முகத்தை மூட கர்ச்சீப் ஏன் தேவை?” என்று எடப்பாடியை சாடினார்.
அத்துடன், திமுக தான் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் அரணாக இருந்து வருகிறது. மாநில மக்களின் நலனுக்காக எப்போதும் போராடிக் கொண்டிருக்கும் சக்தி திமுகவுக்கு உண்டு என்பதை வரலாறே நிரூபிக்கிறது எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.