திமுகவில் இணையும் அதிமுக, தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ. க்கள்?! தொடரும் செந்தில் பாலாஜியின் ஆட்டம்!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அவர் கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு தேர்தலிலும் கவுண்டம்பாளையம் தொகுதியிலேயே போட்டியிட்ட வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ் இபிஎஸ் இடையே  ஒற்றை தலைமை பிரச்சனை உருவானபோது, இவர் ஓபிஎஸ் இபிஎஸ் இல்லாத புதிய தலைமை வேண்டுமென பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுக சாதி கட்சியாக மாற பார்க்கிறது என்றும் அந்த நிலையை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 

அதேபோல கோயம்புத்தூர் சூலூர் தொகுதியின் தேமுதிக முன்னாள் எம்எல்ஏ தினகரனும் திமுகவில் இணைவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு, திமுகவில் சேர்ந்தால் பணம் எம்எல்ஏ சீட் தருவதாக என்னிடம் பேரம் பேசினார்கள் என பேசி பரபரப்பை உண்டாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், இன்று கோயம்புத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து இருவரும் திமுகவில் இணைய உள்ளார் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இருவரையும் திமுகவில் இணைப்பதற்கான வேலைகளை அமைச்சர் செந்தில் பாலாஜியே செய்ததாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk dmdk ex MLAs joint to DMK


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->