அனைத்து தொகுதிகளிலும் திமுக டெபாசிட் இழக்கும்... திமுகவிற்கு கோவை மக்கள் உறுதியாக அதை பரிசளிப்பார்கள் - அதிமுக! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "பண்பான, மரியாதைமிக்க கோவை மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு கடும் கண்டனம்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாயத்திற்கும் பங்காற்றும் கோவை மக்களை, "மற்ற மாவட்டங்களை கெடுத்தார்கள்" என்று சொல்ல என்ன துணிச்சல் இருக்க வேண்டும் திமுக-விற்கு?

இதைக் கேட்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்த செந்தில் பாலாஜி, கோவை மீதான திமுக-வின் தொடர் வன்மப் போக்கையே வெளிப்படுத்தி உள்ளார்.

கோவையை தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கும் விடியா திமுக அரசு, வேண்டுமென்றே தான் கோவை மெட்ரோ திட்டத்திற்கான சமர்ப்பிப்புகளை ஏனோ தானோ என மேம்போக்காக அளித்ததோ? என்ற சந்தேகத்தை, தயாநிதி மாறனின் வன்மப் பேச்சு உறுதி செய்துவிட்டது.

திமுக-வின் இந்த அதிகாரத் திமிருக்கு, ஆணவப் போக்கிற்கு உரிய பாடமாக, "கோவை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்த திமுக" என்ற செய்தியை திமுகவிற்கு கோவை மக்கள் உறுதியாக பரிசளிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Condemn to DMK MK Stalin dhayanithi maran


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->