அதிமுக பொதுக்குழு நடைபெறுமா.? முட்டுக்கட்டை போட்ட மாவட்ட செயலாளர்.. அதிர்ச்சியில் இபிஎஸ் தரப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நேற்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழ் நேற்று முன்தினம் மாலை தான் எங்கள் கைகளுக்கு கிடைத்தது. ஆனால் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பு 15 நாட்களுக்கு முன்பாகவே உறுப்பினர்களின் கைகளில் கிடைத்திருக்க வேண்டும் என்பது சட்ட விதி. எனவே இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று, ஓபிஎஸ் தரப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே, ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், வரும் 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் அம்மன் பி வைரமுத்து என்பவரும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  ஓ.பி.எஸ். மனுவுடன் இந்த மனுவும் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk chennai member case general committee meeting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->