திடீர் பரபரப்பு.. வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த மர்ம நபர்.. அதிமுக, பாஜகவினர் சாலை மறியல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப் பதிவு முடிந்தது வாக்கு வாக்குகள் பதிவான இயந்திரங்கள் பெட்டிக்குள் வைத்து மூடி சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு அவை போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

நேற்று முன் தினம் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மின்னணு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே புளியங்குடியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள் நுழைந்ததாக புகார் தெரிவித்து, புளியங்குடி - கோவில்பட்டி சாலையில் அதிமுக, பாஜக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk and bjp protest in thenkasi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->