அதிமுகவில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம்.? முக்கிய நிர்வாகிகளுக்கு வாங்கப்போகும் பதவி.!! - Seithipunal
Seithipunal


கொரோனா காலகட்டத்திலும் வரும் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அதிமுகவில் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினர் திடீர் ஆலோசனை ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. 

அமைச்சர் வேலுமணி, தங்கமணி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் வைத்திலிங்கம் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அகியேர் அடங்கிய ஐவர் குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய ஆலோசனை 04 மணி நேரம் நீடித்துள்ளது. அதிமுக நிர்வாக வசதிக்காக கட்சியின் மாவட்டங்களை பிரிப்பது, புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்தல் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களது பரிந்துரைகளின்படி கட்சியின் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிமுகவில் பல நிர்வாகிகள் மாற்றா வாய்ப்பு உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk administrative change


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal