ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா சர்ச்சை பேச்சு! வரிந்து கட்டி வந்த எடப்பாடி, அண்ணாமலை.. பின்னணியில் ரஜினி கணக்கு?! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய கருத்து அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் பேசியபோது, “திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை” என்று கூறியதாக செய்திகள் வெளியானது. இந்தக் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பதிவில், ரஜினிகாந்த் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று கூறினார். அரசியலைத் தாண்டி அனைவராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த் என்றும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அன்பும் நம்பிக்கையும் பெற்றவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “அரசியலுக்கு வருவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்களின் உரிமை. ரஜினிகாந்த் தனது முடிவை ஏற்கனவே விளக்கியுள்ள நிலையில், அதனை அரசியல் நோக்கத்தோடு விமர்சிப்பது அரசியல் நாகரிகமற்ற செயல்” என்று அவர் தெரிவித்தார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்தார். தனது பதிவில், ரஜினிகாந்த் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் திரையுலகில் தனித்த இடத்தைப் பெற்றவர் என்றும், அவரது கடின உழைப்பும் கலைத்திறமையும் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றதாகவும் கூறினார். அந்த உயரத்தை எட்டுவது எளிதானது அல்ல என்றும், அத்தகைய கலைஞரின் மனவலிமையை விமர்சிப்பது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகம் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக–பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இணையலாம் என்ற யூகங்கள் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன. ஆனால் தற்போது ஆதவ் அர்ஜுனாவை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் விமர்சித்து வருவது, அந்த கூட்டணி வாய்ப்பு குறைந்திருக்கலாம் என்ற கருத்தை அரசியல் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.

மேலும், ரஜினிகாந்த் குறித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசுவதன் மூலம் ரஜினி ரசிகர்களின் ஆதரவைப் பெறவும் என்.டி.ஏ கூட்டணி முயற்சி செய்து வரலாம் என்ற அரசியல் கணக்கும் இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Adhav Arjuna controversial talk about Rajinikanth Edappadi Annamalai who were building a row Rajini account in the background


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->