BREAKING : நடிகை கஸ்தூரி விரைவில கைது! முன் ஜாமீன் வழக்கில் உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுப்பு தெரிவித்து அவரின் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

இதன் மூலம் அவர் விரைவில் கைது செய்யப்படுவர் என்று தெரிகிறது. ஏற்கனவே தலைமறைவாக இருக்கும் அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிய வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கும், பின்னணியும்:

தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கிடையிலான நட்புறவை பாதிக்கும் வகையில், திட்டமிட்டு தெலுங்கு பேசும் பெண்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கஸ்தூரி முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணை நடந்தபோது, அரசு தரப்பில், அவர் பேச்சு சமூக நல்லிணக்கத்தை குலைத்து, தெலுங்கு பேசும் மக்களின் மன உணர்ச்சியை பாதிக்கின்றது. அவருக்கு ஜாமின் கொடுக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.

அதை எதிர்த்து கஸ்தூரியின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீராம், அவர் பேச்சில் யாருக்கும் ஆபத்தாக இல்லாத வகையில் சிலரையே குறிப்பிட்டார், எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார். 

இதனையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது. தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான், அவர்களை எப்படி பிரித்துப் பேச முடியும்” என்று கேள்வி எழுப்பி, வழக்கு தீர்ப்புக்காக இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கஸ்தூரிக்கு முன் ஜாமீன் வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து, அவரின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Kasthuri may be arrest soon bail case judgement


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->