தமிழக முதல்வரிடம் சரண்டர் ஆன நடிகர் சூர்யா! பரபரப்பு ட்வீட்! இதுவல்லவோ அந்தர் பல்டி!
actor surya thank st tn cm
மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய விவரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளன. இதற்கிடையே, தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் மருத்துவ படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவ படிப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கை வழங்க வழிவகை செய்யும், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேறியது.

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார். அவரின் அந்த பதிவில், "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம். ஒன்றிணைந்து செயல்படுவோம்." என்று நடிகர் சூர்யா அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன் நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றிணைவோம் என்று சூர்யா அறிக்கை விட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
actor surya thank st tn cm