சர்ச்சையை கிளப்பி, கட்சியில் இணையும் விஷால்?! சற்றுமுன் பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


பழம்பெரும் நடிகர் ராதாரவி வாயை திறந்தாலே அது சர்ச்சையில் தான் போய் முடிகிறது. சமீபகாலமாக அவரது பேச்சுக்கள் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது. 

இந்நிலையில், திராவிட கட்சிகளில் மாறி மாறி கூடி இருந்த அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். கொலையுதிர் காலம் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து அவர் சர்ச்சையாக கருத்து தெரிவிக்க அதனைத் தொடர்ந்து அவர் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். 

அதன்பின்னர் பாஜகவில் சேர்ந்த ராதாரவி தற்பொழுது செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு நல்லது பிறந்தால் அதே நாளில் ஒரு கெட்டதும் பிறக்கும் என்று மோடியின் பிறந்த நாளை குறிப்பிட்டு பேசியுள்ளார். 

மோடியின் பிறந்த நாளும் பெரியாரின் பிறந்த நாளும் ஒரே நாளில் அமைந்தது குறித்து அவர் கூறியுள்ளார். மேலும், நடிகர் விஷால் பாஜகவில் இணைந்தால், நல்லது என்றும் அப்படி விஷால் இணையும் பட்சத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய தான் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor radharavi speech about vishal politics


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal