திமுகவுடன் கூட்டணி ஏன்? - ம.நீ.ம தலைவராக "நடிகர் கமல்ஹாசன்" விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. மாறாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய போகும் கமல்ஹாசன் கட்சிக்கு வரும் 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு சீட் வழங்க திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவை அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளே கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். 

இந்நிலையில் திமுகவுடனான கூட்டணிக்கு‌ விளக்கம் அளித்துள்ளார் நடிகர் கமலஹாசன்.  "தமிழ்நாட்டின் நலன், தேசத்தின் நலனுக்காக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்" என வீடியோ வெளியிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் தற்போதைய சூழல் தமிழ்நாட்டுக்கும், தேசத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதற்காகவே திமுகவுடன் கூட்டணி என கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் சகோதரர்களே.. தேசத்திற்காக நாம் அனைவரும் ஒரே மேடையில் அமர வேண்டும். தற்போதைய சூழல் எதிர்வாத சக்திகளுக்கு கைகூடி விடக்கூடாது" என முழுநேர அரசியல்வாதி போன்றே விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக யாரும் முழுநேர அரசியல்வாதி கிடையாது என நடிகர் கமலஹாசன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Kamal Hassan given explanation for alliance with DMK


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->