அதிரடி! திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 புதிய திட்டப் பணிகள் அறிவிப்பு...!- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Action 5 new project works announced in Tirupattur district Chief Minister MK Stalin
திருப்பத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மண்டலவாடியில் ரூ.174 கோடி மதிப்புள்ள முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும் அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கிய முதலமைச்சர், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூருக்கு 5 புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.அது என்னவென்றால்,"ஆலங்காயம் ஊராட்சியிலுள்ள மேக்னா மலையில் ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும்.
குமாரமங்கலம் பகுதியில் சீராக மின்விநியோகம் செய்யும் வகையில் ரூ.6 கோடியில் புதிய துணைமின் நிலையம் அமைக்கப்படும்.நல்லகொண்டா பகுதியில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் ரூ.200 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
திருப்பத்தூர் நகர மைய பகுதியில் ரூ.18 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும்.ஆம்பூரில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய நூலகம் அமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது அரசியல் வட்டாரங்களில் வரவேற்கத்தக்க விதமாக மாறியுள்ளது.
English Summary
Action 5 new project works announced in Tirupattur district Chief Minister MK Stalin