அடிமைகளை உருவாக்காமல், சிறந்தவர்களை உருவாக்குவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்; பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர்..!
Acting Governor RV Arlekar says the aim of the National Education Policy is to create better people not slaves
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் அடிமைகளை உருவாக்காமல், சிறந்தவர்களை உருவாக்குவதே என தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய கல்வி முறையில் மனப்பாடம் செய்வதைத் தவிர வேறு எதுவும் இல்லை எனவும், ஞாபக சக்தியை சோதிக்கும் தேர்வுதான் தற்போது நடைபெறுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கல்வியில் காலனித்துவ சிந்தனையை ஒழிக்க புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் எனவும் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவுக்கென கல்விமுறை இருக்கும்போது, அதை புறக்கணித்து, எதற்காக பிற நாட்டவரின் கல்வி முறையைப் பின்பற்ற வேண்டும் எனவும், ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையையும், தொழில்நுட்பத்தையும் இணைத்து வழங்குவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் எனவும் ஆளுநர் மேலும், குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Acting Governor RV Arlekar says the aim of the National Education Policy is to create better people not slaves