எடப்பாடி பழனிசாமி பெயரில் ரூ.50 லட்சம் அசையும் சொத்து; அசையா சொத்து ஏதுவுமில்லை; வேட்புமனுவில் தகவல்..!
According to his nomination papers Edappadi Palaniswami possesses movable assets worth Rs 50 lakh in his name
சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் ரூ.50 லட்சம் அசையும் சொத்து உள்ளதாகவும், அசையா சொத்து ஏதுவுமில்லை என்று வேட்புமனுவில் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமன்ற தேர்தலில், எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து மதிப்பு என்ன என்பது குறித்த தெரிவித்துள்ளதாவது;
எடப்பாடி பழனிசாமியிடம் அசையும் சொத்து, ரொக்கம் 50 ஆயிரம் ரூபாயும், 100 கிராம் தங்க நகைகளும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவசாய நிலங்கள் எதுவுமில்லை என்றும், 17 லட்சம் ரூபாய் கடன்கள் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது மனைவி ராதா பெயரில் 08 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் பண்ணை வீடு இருப்பதாகவும், மனைவி பெயரில் உள்ள மொத்த சொத்து மதிப்பு 3.45 கோடி ரூபாய் எனவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் மீது 05 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
According to his nomination papers Edappadi Palaniswami possesses movable assets worth Rs 50 lakh in his name