பொதுச்செயலாளராக ஓபிஎஸ், ஈபிஎஸ் இரண்டு பேருமே வேண்டாம் - அதிமுகவில் புதிய திருப்பமா? பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவினரிடையே பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவின் ஒற்றை தலைமை ஓபிஎஸ் தான் வரவேண்டுமென்று சுவரொட்டிகளை ஒட்டினர். மறுபுறத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் அதிமுகவில் ஒற்றை தலைமை எடப்பாடியார் என்று சுவரொட்டிகளை ஒட்டினர்.

இதற்கிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், "அதிமுகவில் தற்போதைய நிலையில் ஒற்றை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமை குறித்த எடப்பாடி கே பழனிசாமி தான் தெரிவிக்க வேண்டும். என்னை பொருத்தவரை கட்சி நன்றாக இருக்க வேண்டும். அதற்காக நான் பல தியாகங்களை செய்து உள்ளேன்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் அதிமுக கொடி ஏற்றிய தொண்டர்களிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த ஒற்றை தலைமை விவகாரம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அப்படி ஒரு விஷயம் விவாதிப்பட்டு வருவதாகவே அவர் கண்டுகொள்ளவில்லை. 

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, " ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரச்சனை செய்வது சரிதானா? ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை இருந்திருக்காது. தேவையின்றி பிரச்சனை செய்வதற்கு பதிலாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கட்சியில் இருந்து விலகி விடலாம்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தொண்டர்களை கேட்டால் நீங்கள் கொண்டு வந்தீர்கள்? என்று ஓபிஎஸ், ஈபிஎஸ்.,க்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், அதிமுகவிற்கு பொதுச்செயலாளராக ஓபிஎஸ் இபிஎஸ் தேவையில்லை என்றும், இவர்கள் அமைதியாக இருந்தாலே போதும் தொண்டர்கள் வேறு ஒருவரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aarukutty press meet admk one head issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->